நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு கட்டுமான தளத்தில் தற்காலிகமாக போடப்பட்ட கட்டமைப்பு சரிந்து விழுந்து விபத்து: தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார் 

ஜார்ஜ்டவுன்: 

பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் தற்காலிகமாக போடப்பட்டிருந்த கட்டமைப்பு ஒன்று சரிந்து விழுந்த சம்பவத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்தச் சோகச் சம்பவம் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மாலை சுமார் 6.15 மணியளவில் நிகழ்ந்துள்ளது. 

கட்டடத்தின் எட்டாவது மாடியில் கட்டமைப்பைப் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக நிகழந்த கட்டமைப்பின் திடீர் சரிவால் அந்தத் தொழிலாளி கீழே விழுந்தார்.

இந்த விபத்தில் பலத்த தலைக்காயங்களுக்குள்ளான அந்தத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பினாங்கு மாநில JKKP உடனடியாக விசாரணையைத் தொடங்கியது. 

மேலும், பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்யும் வரை அந்தப் பகுதியில் அனைத்து வேலைகளும் நிறுத்தப்பட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

1994ஆம் ஆண்டு வேலையிட பாதுகாப்பு & சுகாதாரம்  சட்டத்தின் கீழ் இந்தச் சம்பவம் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 

பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அனைத்து வேலை வழங்குநர்களையும் அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர். 

உயரத்தில் வேலை செய்யும் போது கடுமையான ஆபத்துகளைத் தவிர்க்க முறையான பாதுகாப்பு வழிகாட்டிகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset