நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாரான் பல்பொருள் அங்காடி கழிவறையில் இளைஞரை ரகசியமாக புகைப்படம், வீடியோ எடுத்த அரசு ஊழியர் கைது 

மாரான்: 

பகாங், மாரானில் உள்ள பல்பொருள் அங்காடிக் கழிவறையில் ரகசியமாக இளைஞர் ஒருவரை புகைப்படம், வீடியோ எடுத்ததாக சந்தேகிக்கப்படும் 39 வயதுடைய அரசு ஊழியர் ஒருவர்  இரு நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார் 

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸ் உடனடியாக தீவிர விசாரணைகளை நடத்தி நடவடிக்கையை எடுத்ததாக மாரான் போலிஸ் தலைவர் வோங் கிம் வாய் கூறினார். 

கழிவறையில் இருந்தபோது சந்தேக நபர் ஒருவர் தன்னை வீடியோ எடுத்ததாக அந்த இளைஞர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பல்பொருள் அங்காடிக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். 

காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையின் போது, அவர் பாதிக்கப்பட்ட இளைஞரின் படங்களை வீடியோ மற்றும் புகைப்படங்களாகப் பிடித்ததை ஒப்புக்கொண்டார். 

 விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து அவதூறான தரவுகள் அடங்கிய கைப்பேசியைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், மேலதிக விசாரணைக்காக அந்தச் சந்தேக நபரை நீதிமன்ற காவலில் மூன்று நாட்கள் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

விசாரணைக்காக சந்தேக நபர் போலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 509, 292இன் கீழ் விசாரணை செய்யப்படுவதாக அவர் சொன்னார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset