செய்திகள் மலேசியா
மீன்பிடிப் படகை மீட்க சுங்கை பேராக் ஆற்றில் குதித்த ஆடவர் நீரில் மூழ்கினார்
ஈப்போ:
ஆற்றில் சிக்கிக்கொண்ட மீன்பிடிப்படகை மீட்க சுங்கை பேராக் ஆற்றில் குதித்த ஆடவர் நீரில் மூழ்கினார்
மீன் கூண்டில் இருந்து விலகிச் சென்ற படகினைப் பிடிப்பதற்காக அவர் உடனடியாக ஆற்றில் குதித்துள்ளார்.அவரது உயிரைக் காப்பாற்ற முயன்ற உறவுக்கார சிறுவனின் முயற்சி தோல்வியில் முடிந்ததுடன், சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது
தகவல் அறிந்ததும் ஶ்ரீ இஸ்கண்டார், பாரிட் மற்றும் கம்போங் காஜா நிலையங்களின் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
நேற்று மாலை 5 மணி முதல் இரவு 9.45 மணி வரை தீயணைப்புப் படையினரும் பொதுமக்களும் இணைந்து தீவிரத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
எனினும், இரவு நேரம் வரை பாதிக்கப்பட்ட நபர் எவ்விதமான துப்பும் இன்றி கிடைக்காமல் போனார்.இன்றைய தேடுதல் பணி காலை 8 மணிக்குத் தொடங்கியதுடன், தெலுக் இந்தான் மற்றும் புலாவ் பங்கோர் நிலையங்களின் நீர்மூழ்கி மீட்புக் குழுவினர் இதில் களமிறக்கப்பட்டுள்ளனர்
மேலும், காணாமல் போன நபரைத் தேடும் பணிக்கு உதவச் சிறப்பு கே9 மோப்ப நாய் படையும் அழைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதுடன், ஆற்றுப் பகுதிக்குச் செல்லும்போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், பாதிக்கப்பட்ட நபர் குறித்த துப்பு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 12:02 pm
கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தங்க ரத ஊர்வலத்துடன் நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
September 11, 2026, 11:52 am
16ஆவது பொதுத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்: அதுவே நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது
September 11, 2026, 11:51 am
சீன, இந்தியர்களின் வாக்குகளின் அதிகரிப்பு; மஇகா, மசீசவின் வெற்றிக்குச் சான்றாகும்: அஷ்ராஃப்
September 11, 2026, 11:48 am
ஹெலிகாப்டர் விபத்து; விமானி, மருத்துவரின் வாரிசுகள் பெர்கேசோ இழப்பீடு பெறத் தகுதியுடையவர்கள்: டத்தோஶ்ரீ ரமணன்
September 11, 2026, 11:30 am
மாரான் பல்பொருள் அங்காடி கழிவறையில் இளைஞரை ரகசியமாக புகைப்படம், வீடியோ எடுத்த அரசு ஊழியர் கைது
September 11, 2026, 11:29 am
அம்னோ பொதுப்பேரவையில் பாஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்பு
September 11, 2026, 10:27 am
