நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிபோங் தெபால் புலாவ் பூரோங் குப்பை மேட்டில் தீ விபத்து: உயிர் சேதம் எதுவும் இல்லை

நிபோங் தெபால்: 

பினாங்கு மாநிலத்தின் நிபோங் தெபால் பகுதியில் உள்ள புலாவ் பூரோங் குப்பை மேட்டில் ஏற்பட்ட நேற்றிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிரிழப்பு சம்பவங்களும் இங்கு ஏற்படவில்லை என்று தீயணைப்பு, மீட்புப்படை துறையினர் உறுதிப்படுத்தினர். 

தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு இரவு 11:36 மணிக்கு வந்ததை அடுத்து, நிபோங் தெபால் நிலைய வீரர்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். 

 தீ மேலும் பரவாமல் இருக்க தீத்தடுப்பு கோடுகளை அமைக்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு, கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

சுமார் 120 மற்றும் 90 அடி பரப்பளவில் பரவிய இந்த தீ, ஒரு மணி நேரத்திற்குள் தீயணைப்பு வீரர்களால் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்தத் தீயணைப்பு நடவடிக்கை சுங்கை பக்காப், நிபோங் தெபால் ஆகிய இரண்டு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

பல்வேறு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களும் மற்றும் தன்னார்வப் படையினரும் இணைந்து முழுமையான தீ அணைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset