செய்திகள் மலேசியா
ஜசெக உடனான உறவுகளை மலாய் வாக்காளர்களிடம் கொண்டு சேர்ப்பது அம்னோவுக்கு கடினமாக இருந்தது: முஹம்மது ஹசன் ஒப்புதல்
கோலாலம்பூர்:
கூட்டாட்சி அரசாங்கத்தில் ஜசெக உடனான கூட்டணியை மலாய் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளும்படி செய்வதில் அம்னோ அறைகூவல்களை எதிர்கொள்கிறது.
ஏனெனில் இட ஒதுக்கீடு, இஸ்லாம் குறித்த டிஏபியின் நிலைப்பாடு பற்றிய நீண்டகால கருத்துக்கள் இன்னும் நீடிக்கின்றன என்று கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹம்மது ஹசன் அம்னோ பொதுப் பேரவைக் கூட்டத்தில் கூறினார்.
பொருளாதார வளர்ச்சி, ஆளுகை சீர்திருத்தங்களில் ஒற்றுமை அரசாங்கத்தின் முயற்சிகளை அவர் ஏற்றுக்கொண்டாலும், இந்தக் கூட்டணி மலாய், இஸ்லாமிய நலன்களைப் பாதிக்கும் என்ற அச்சங்களால் இந்த முயற்சிகள் மறைக்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
மலாய் மக்ககளிடையே உம்மோ மீண்டும் ஆதரவைப் பெறுவதற்கு இந்தக் கவலைகளை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியம் என்று முஹம்மது ஹசன் வலியுறுத்தினார்.
மேலும், இந்த விவகாரம் திறம்பட கையாளப்படாவிட்டால், கட்சி அந்த நலன்களைப் புறக்கணிப்பதாகக் கருதப்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2026, 6:29 pm
நல்லதே நடக்கும் எனப் பிரார்த்தியுங்கள்: நஜிப்பின் மகன்
September 9, 2026, 6:28 pm
தேசிய ஒருமைப்பட்டுத் துறை அமைச்சின் 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை விளக்கக் கூட்டம்
September 9, 2026, 6:26 pm
16ஆவது பொதுத் தேர்தலை விரைவில் நடத்த தேசிய முன்னணி வலியுறுத்த வேண்டும்: டத்தோ லோகபாலா
September 9, 2026, 6:26 pm
பாலர்பள்ளி மாணவர்களிடையே தேசப்பற்று விழிப்புணர்வு அதிகரித்துள்ளது: ஜெயசுதா
September 9, 2026, 4:01 pm
2.24 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருளுடன் மலேசிய பெண் இந்திய விமான நிலையத்தில் கைது
September 9, 2026, 3:33 pm
