செய்திகள் மலேசியா
16ஆவது பொதுத் தேர்தலை விரைவில் நடத்த தேசிய முன்னணி வலியுறுத்த வேண்டும்: டத்தோ லோகபாலா
கோலாலம்பூர்:
அரசியல் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் வகையில், 16ஆவது பொதுத் தேர்தலை முடிந்தவரை விரைவாக நடத்துவதற்கு தேசிய முன்னணி வலியுறுத்த வேண்டும்.
பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா மோகன் இதனை வலியுறுத்தினார்.
சமீபத்தில் ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து நாடு ஏற்கனவே தேர்தல் காய்ச்சல் நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அடுத்ததாக மலாக்கா தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.
நாம் தற்போது அதிக அளவில் நிலையற்ற தன்மையைக் காண்கிறோம். நிலைமை கட்டுக்கடங்காமல் போவதற்கு முன்பே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.
பொதுத் தேர்தலை முடிந்தவரை விரைவாக நடத்த தேமு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
சமீபத்தில் அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, 16ஆவது பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் அரசாங்கம் மக்களிடமிருந்து புதிய ஆணையைப் பெற முடியும் என்று அவர் கூறியிருந்தார்.
தேமு தலைவருமான ஜாஹிட், நாடாளுமன்றத்தின் முழுக் கால அவகாசம் நிறைவடையும் வரை தேர்தல் நடத்தப்பட்டாலும், அதனை எதிர்கொள்ள கூட்டணி தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், பொதுத் தேர்தலிலிருந்து மாநிலத் தேர்தல்களைத் தனியாக நடத்துவதால் ஏற்படும் அதிக செலவுகளை அரசாங்கம் கருத்தில் கொள்ளும் என நம்புவதாக லோகா பாலா தெரிவித்தார்.
இது வரி செலுத்துவோரின் பணத்தை உள்ளடக்கியது. தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டால், செலவைக் குறைக்க முடியும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2026, 6:29 pm
நல்லதே நடக்கும் எனப் பிரார்த்தியுங்கள்: நஜிப்பின் மகன்
September 9, 2026, 6:28 pm
தேசிய ஒருமைப்பட்டுத் துறை அமைச்சின் 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை விளக்கக் கூட்டம்
September 9, 2026, 6:26 pm
பாலர்பள்ளி மாணவர்களிடையே தேசப்பற்று விழிப்புணர்வு அதிகரித்துள்ளது: ஜெயசுதா
September 9, 2026, 4:01 pm
2.24 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருளுடன் மலேசிய பெண் இந்திய விமான நிலையத்தில் கைது
September 9, 2026, 3:33 pm
சபாவில் லாரி, கார் மோதி கொடூர விபத்து: நால்வர் பரிதாபமாக பலி
September 9, 2026, 2:44 pm
