செய்திகள் மலேசியா
அரச மன்னிப்பு வழங்கும் மாமன்னரின் அதிகாரத்தை நம்பிக்கை கூட்டணி கேள்விக்குட்படுத்துவதாக அம்னோ குற்றம் சாட்டுகிறது
கோலாலம்பூர்:
ஊழல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட நபர்கள் தங்கள் முழு தண்டனைக் காலத்தையும் அனுபவிக்க வேண்டும் என்ற கூட்டணியின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து, மன்னிப்பு வழங்குவதற்கான மாமன்னரின் அரசியலமைப்பு அதிகாரத்தை நம்பிக்கை கூட்டணி கேள்விக்குட்படுத்துவதாகத் தெரிகிறது என்று அம்னோ குற்றம் சாட்டியுள்ளது.
கூட்டரசு அரசியலமைப்பின் 42(1) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மன்னிப்பு வழங்கும் அதிகாரம் அகோங்கின் தனிப்பட்ட உரிமையாகும் என்றும், அதை எந்தக் கட்சியும் கேள்விக்குட்படுத்தக் கூடாது என்றும் பொதுச்செயலாளர் அஷ்ராஃப் வாஜ்தி துசுகி கூறினார்.
மாமன்னரின் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதாகத் தோன்றும் நம்பிக்கை கூட்டணி செயலகத்தின் அறிக்கைக்கு அம்னோ வருத்தம் தெரிவிக்கிறது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
நேற்று நள்ளிரவுக்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஊழல் குற்றங்கள் அல்லது அதிகார துஷ்பிரயோகத்திற்காக, குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள், தங்கள் முழு தண்டனைக் காலத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று நம்பிக்கை கூட்டணி செயலகம் வலியுறுத்தியுள்ளது.
நம்பிக்கை கூட்டணியின் அறிக்கையில் எந்தவொரு வழக்குகளின் பெயரோ அல்லது தனிநபர்களின் பெயரோ குறிப்பிடப்படவில்லை.
இருப்பினும், 1எம்டிபி ஊழல் தொடர்பான குற்றங்களுக்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கோரிய கருணை மனுவை, மற்ற விஷயங்களுடன் சேர்த்து பரிசீலிப்பதற்காக, கூட்டரசு மன்னிப்பு வாரியம் வெள்ளிக்கிழமை கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்த அறிக்கை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2026, 6:29 pm
நல்லதே நடக்கும் எனப் பிரார்த்தியுங்கள்: நஜிப்பின் மகன்
September 9, 2026, 6:28 pm
தேசிய ஒருமைப்பட்டுத் துறை அமைச்சின் 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை விளக்கக் கூட்டம்
September 9, 2026, 6:26 pm
16ஆவது பொதுத் தேர்தலை விரைவில் நடத்த தேசிய முன்னணி வலியுறுத்த வேண்டும்: டத்தோ லோகபாலா
September 9, 2026, 6:26 pm
பாலர்பள்ளி மாணவர்களிடையே தேசப்பற்று விழிப்புணர்வு அதிகரித்துள்ளது: ஜெயசுதா
September 9, 2026, 4:01 pm
2.24 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருளுடன் மலேசிய பெண் இந்திய விமான நிலையத்தில் கைது
September 9, 2026, 3:33 pm
சபாவில் லாரி, கார் மோதி கொடூர விபத்து: நால்வர் பரிதாபமாக பலி
September 9, 2026, 2:44 pm
