நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலர்பள்ளி மாணவர்களிடையே தேசப்பற்று விழிப்புணர்வு அதிகரித்துள்ளது: ஜெயசுதா

மலாக்கா:

பாலர்பள்ளி மாணவர்களின் கல்வி பெருந்திட்டத்தில் தமிழ்கல்வியும் தேசப்பற்றின் முக்கியத்துவத்தின் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்கிறார் TGJJ பாலர்பள்ளியின் தலைமை பொது உறவு அதிகாரி ஜெயசுதா தெரிவித்தார்.

5ஆவது ஆண்டாக இம்முறை முற்றிலும் மாறுபட்ட முறையில் நடத்தப்பட்ட ஒற்றுமை ஓட்டம் மாணவர்களிடையே மட்டுமல்லாது பெற்றோர்களிடையும் ஒற்றுமையை வலுப்படுத்தி தேசப்பற்றை விதைக்க பங்காற்றியது.

நிகழ்வில் மாணவர்களுடன் ஆசிரியர்கள் , பெற்றோர்கள் இணைந்து ஜாலோர் கெமிலாஙை கையில் அசைத்தவாறு ஒற்றுமை ஓட்டத்தில் இணைந்து நிகழ்வை தொடக்கி வைத்தனர்.

மேலும் நிகழ்வின் முத்தாய்ப்பாக மாணவர்களும் பாரம்பரிய பெட்டியும் என்று கருப்பொருளில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

4 வெவ்வேறு தலைப்புகள் , 14 மாநிலங்கள் அதன் சிறப்புகள் , சுதந்திர தின பாடல்கள் , வரலாற்று சுவடுகள் என பின்னணியிலிருந்து மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டின் பேரில் பெற்றோர்களின் துணைக்கொண்டு இந்த போட்டியில் பங்கேற்று தத்தம் தனித்திறன்களை வெளிக்கொணர்ந்தனர்.

அதோடு நின்றுவிடாது மாணவர்களின் மத்தியில் தலைமைத்துவ பண்பும் , மேடை படைப்பாற்றலை விதைக்க சுதந்திர தின கதைக்கூறுதல் , கவிதை படைத்தல் , எழுச்சிப்பாடல் பாடுதல் என பல போட்டியில் மாணவர்கள் பங்கெடுத்து தங்களுள் புதையுண்டிருக்கும் தனித்திறன்களை அரங்கேற்றினர்.

நாம் மலேசியர்கள், சாயா அனாக் மலேசியா என்று கரகோஷத்துடன் மாணவர்கள் கொடிகளை கையில் ஏந்தி ஒற்றுமை ஓட்டத்தில் வந்தது பலரின் கவனத்தை ஈர்த்தனர்.

பங்கேற்ற அனைவருக்கும் பதக்கமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு நிகழ்வு விமரிசையாக நடந்தேறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset