செய்திகள் இந்தியா
ரஷ்யாவில் பொது இடத்தில் மது அருந்தி, ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்த சந்தன் குப்தா, அவரது நண்பர் ஆஷிஷ் இருவரையும் ரஷ்ய காவல்துறையினர் கைது செய்தனர்: கணவரை மீட்டுத்தர மோடிக்கு காணொலி அனுப்பிய மனைவி
புதுடெல்லி:
மாஸ்கோவில் ரஷ்ய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள கான்பூரைச் சேர்ந்த இந்தியப் பொறியாளர் ஒருவரை, அந்நாட்டு ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்க முயற்சி நடப்பதாக அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த பொறியாளர் சந்தன் குப்தா, நொய்டா நிறுவனமான ஃபிளெக்ஸ் ஃபிலிம்ஸின் மாஸ்கோ கிளையில் பணியாற்றி வருகிறார். தனது மனைவி ஸ்நேகா குப்தா, 10 வயது மகனுடன் அவர் மாஸ்கோவில் வசித்து வருகிறார்.
கடந்த செப்டம்பர் 5-ம் தேதி இரவு, மாஸ்கோவின் சிவப்பு சதுக்க பகுதியில் பொது இடத்தில் மது அருந்தி, ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்ததாக சந்தன் குப்தா, அவரது நண்பர் ஆஷிஷ் இருவரையும் ரஷ்ய காவல்துறையினர் கைது செய்தனர்.
தனது கணவரை உக்ரைன் போரில் பங்கேற்க அவரை ரஷ்ய ராணுவத்தில் சேருமாறு காவல்துறையினர் கட்டாயப்படுத்துவதாக அவர் மனைவி குற்றம் சாட்டினார். தன் கணவரைப் பாதுகாப்பாக மீட்க பிரதமர் நரேந்திர மோடியும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கண்ணீருடன் காணொலி மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து தகவல் தெரிவித்த அரசு வட்டாரங்கள், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் சந்தன் குப்தா, ஆஷிஷை விடுவிக்க உள்ளூர் அதிகாரிகளிடம் சந்திக்க அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவித்தன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 7, 2026, 9:32 pm
ஒற்றை மனிதராக ஆற்றை சுத்தம் செய்யும் 21 வயது மாணவர்: சர்வதேச அங்கீகாரம்
September 6, 2026, 10:49 pm
டில்லியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; மூவர் மரணம்: பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
September 6, 2026, 4:23 pm
செல்போன் மோகத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு மோடி அறிவுரை
September 5, 2026, 5:23 pm
உள்ளூர் மொழியைக் கற்க டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓராண்டு அவகாசம்: மஹாரஷ்ட்ரா அரசு உத்தரவு
September 5, 2026, 11:13 am
ஏர் இந்தியா விமானி போதைப் பொருள் உட்கொண்டிருந்தது நிரூபணமானது: பணிநீக்கம் செய்யப்பட்டார்
September 3, 2026, 9:58 pm
காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் பெண்கள் குறித்த கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம்
September 2, 2026, 12:40 am
நீட் பிரச்சினையில் போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ததால் சிஜேபியின் செப்.5 போராட்டம் வாபஸ்
September 1, 2026, 10:18 am
அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு: இந்தியா கடும் எச்சரிக்கை
August 31, 2026, 7:17 pm
