நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உள்ளூர் மொழியைக் கற்க டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓராண்டு அவகாசம்: மஹாரஷ்ட்ரா அரசு உத்தரவு

மும்பை:

இந்தியாவின் மஹராஷ்ட்டிர மாநிலம் டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள் மராத்தி (Marathi) எனும் உள்ளூர் மொழியைக் கற்க ஓராண்டு அவகாசம் வழங்குகிறது.

அண்மையில் டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள் மராத்திய மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்கிய புதிய சட்டம் நடப்புக்கு வந்தது.

அதன்படி ஓட்டுநர்கள் மராத்தியில் பேசும் திறன் சோதிக்கப்படும். சோதனையில் தேர்ச்சிபெறாவிட்டால் மொழியில் மேம்பட ஒரு மாதம் அவகாசம் கொடுக்கப்படும். அதன்பிறகும் பேசச் சிரமப்பட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படலாம்.

ஆனால் அதற்கு எதிராக ஓட்டுநர்கள் பலர் ஆர்ப்பரித்தனர்.

அங்குள்ள ஓட்டுநர்கள் பலர் மற்ற மாநிலங்களிலிருந்து வேலைதேடி வந்தவர்கள்; அவர்கள் பெரும்பாலும் இந்தி பேசக்கூடியவர்கள்.

இந்தச் சட்டத்தால் புதிய மொழியைக் கற்றுக்கொள்ளும்போது வேலையை இழக்க நேரிடலாம் என்று ஓட்டுநர் சங்கம் குறைகூறியது.

அதன்பிறகு மராத்தி மொழியைக் கற்றுக்கொள்வதற்கான அவகாசம் ஒரு மாதத்திலிருந்து ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset