நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

செல்போன் மோகத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு மோடி அறிவுரை

புது டெல்லி:

செல்போன் மோகத்​தில் சிக்​கி​யிருக்​கும் மாணவ, மாண​வியரை, ஆசிரியர்​கள் மீட்​டெடுக்க வேண்​டும் என்று பிரதமர் மோடி அறி​வுறுத்தி உள்​ளார்.

நாடு முழு​வதும் நேற்று ஆசிரியர் தினம் கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி பல்​வேறு மாநிலங்​களைச் சேர்ந்த 82 ஆசிரியர்​களுக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு டெல்​லி​யில் நேற்று நல்​லாசிரியர் விருதுகளை வழங்​கி​னார். 

பின்​னர் விருது பெற்ற ஆசிரியர்​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி கலந்​துரை​யாடி​னார். அப்​போது அவர் கூறிய​தாவது:

இந்​தி​யா​வில் பாரம்​பரிய கூட்​டுக் குடும்​பங்​களின் எண்​ணிக்கை குறைந்து வரு​கிறது. இந்​தக் குறையைப் போக்க மாணவ, மாண​வியரின் வாழ்க்​கை​யில் ஆசிரியர்​கள் மிக முக்​கிய பங்​களிப்பை வழங்க வேண்​டும்.

குழந்​தைகளின் தனித்திறமை​களை வளர்க்க அவர்​களை ஊக்​குவிக்க வேண்​டும் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset