செய்திகள் இந்தியா
காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் பெண்கள் குறித்த கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம்
புதுடெல்லி:
கேரள மாநிலம், கொச்சியில் ஹுப்புல் ரசூல் மாநாட்டில், சன்னி பிரிவு மதகுருவும், இந்தியாவின் கிராண்ட் முஃப்தி என்று அழைக்கப்படும் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் பேசும்போது, “பெண்கள் தங்களது வீடுகளுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் பொது வெளிக்கு வரக்கூடாது” என்றார். இது நாடு முழுவதும் கடும் எதிர்வினையை உண்டாக்கியுள்ளது. அவருக்கு கண்டங்கள் வலுத்து வருகின்றன.
இதுகுறித்து கேரள முதல்வர் வி.டி.சதீசன் கூறியதாவது:
பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற அபூபக்கர் முஸ்லியாரின் நிலைப்பாட்டை மாநில அரசு ஏற்கவில்லை.
இஸ்லாம் ஒருபோதும், பெண்களை வீட்டுக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்று கூறவில்லை. வளர்ச்சியடைந்து வரும் கேரளத்துக்கு இது பொருத்தமான நிலைப்பாடு அல்ல.
இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்கும் அளவுக்கு இது 19-ம் நூற்றாண்டு அல்ல. சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் பெண்களும் இணைந்து செயல்பட வேண்டும். இதுதான் எங்களது நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 2, 2026, 12:40 am
நீட் பிரச்சினையில் போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ததால் சிஜேபியின் செப்.5 போராட்டம் வாபஸ்
September 1, 2026, 10:18 am
அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு: இந்தியா கடும் எச்சரிக்கை
August 31, 2026, 7:17 pm
68 டன் நிவாரண பொருட்களை நேபாளத்துக்கு அனுப்பியது இந்தியா
August 30, 2026, 8:36 pm
புனித மக்காவில் தொழுகை விரிப்புகளை வழங்கிய பாலிவுட் நடிகை கூட்ட நெரிசலில் சிக்கி தடுமாறினார்
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
