செய்திகள் இந்தியா
ஒற்றை மனிதராக ஆற்றை சுத்தம் செய்யும் 21 வயது மாணவர்: சர்வதேச அங்கீகாரம்
பியோரா:
மத்திய பிரதேச மாநிலம் பியோரா நகரைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவர் சுரேந்திர சிங் சவுத்ரி எனும் பிட்டு தபாஹி. இவர் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்திருந்த, பியோரா நகரில் ஓடும் அஜ்னார் ஆற்றை தனி ஆளாக சுத்தம் செய்ய தொடங்கினார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் தினமும் ஆற்றில் இறங்கி பிளாஸ்டிக் கழிவுகள், பாசிகள், ரசாயனக் கழிவுகளை அகற்றினார். தூய்மைப் பணிகளுக்கு முன்பும், பின்பும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர, அது வைரலாக பரவியது. மேலும் ஆற்றை சுத்தப்படுத்தும் பிட்டுவின் முயற்சிக்கு ஆதரவு பெருகியது.
இந்நிலையில், நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘ஓஷன் கிளீனப்' என்கிற சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி போயன் ஸ்லாட், தங்களது அமைப்பில் இணைந்து பணியாற்ற பிட்டுவுக்கு இன்ஸ்டாகிராமில் அழைப்பு விடுத்துள்ளார்.
‘ஓஷன் கிளீனப்' உலகின் பெருங்கடல்கள் மற்றும் ஆறுகளில் உள்ள நெகிழி மாசுபாட்டை அகற்றுவதற்காக, மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கி விரிவுபடுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் லாப நோக்கமற்ற அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 6, 2026, 10:49 pm
டில்லியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; மூவர் மரணம்: பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
September 6, 2026, 4:23 pm
செல்போன் மோகத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு மோடி அறிவுரை
September 5, 2026, 5:23 pm
உள்ளூர் மொழியைக் கற்க டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓராண்டு அவகாசம்: மஹாரஷ்ட்ரா அரசு உத்தரவு
September 5, 2026, 11:13 am
ஏர் இந்தியா விமானி போதைப் பொருள் உட்கொண்டிருந்தது நிரூபணமானது: பணிநீக்கம் செய்யப்பட்டார்
September 3, 2026, 9:58 pm
காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் பெண்கள் குறித்த கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம்
September 2, 2026, 12:40 am
நீட் பிரச்சினையில் போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ததால் சிஜேபியின் செப்.5 போராட்டம் வாபஸ்
September 1, 2026, 10:18 am
அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு: இந்தியா கடும் எச்சரிக்கை
August 31, 2026, 7:17 pm
68 டன் நிவாரண பொருட்களை நேபாளத்துக்கு அனுப்பியது இந்தியா
August 30, 2026, 8:36 pm
