செய்திகள் மலேசியா
தபோங் ஹாஜியின் முன்னாள் தலைமை நடவடிக்கை அதிகாரி மீதான ஊழல் வழக்கு: செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஷா ஆலாம்:
தபோங் ஹாஜி வாரியத்தின் முன்னாள் தலைமை நடவடிக்கை அதிகாரி ADI AZUAN ABDUL GHANI மீதான ஊழல் வழக்கின் விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் தெஎதிக்கு ஒத்திவைத்தது
ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றம் இந்த ஒத்திவைப்பை அறிவித்தது.
இதய நலப் பிரச்சனை காரணமாக குற்றஞ்சாட்டப்பட்டவர் மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது வழக்கறிஞர் வான் அஸ்வான் ஐமன் வான் ஃபக்ருடீன் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, நீதிபதி அவாங் கெரிஸ்னாடா அவாங் மஹ்மூத் இந்த புதிய தேதியை நிர்ணயித்தார்.
ஆதி அசுவான் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக வழக்கறிஞர் கூறினார்.
அவரது மனைவி சுரீன் சைனுடீனும் தனது கணவர் பல கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர் எவ்வளவு காலம் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
சுரீன் அளித்த இந்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக நீதிபதி அவாங் தெரிவித்தார்.
மேலும், மருத்துவமனைக்கே சென்று ஆதி அசுவான் மீதான குற்றச்சாட்டுகளை வாசிப்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தபோங் ஹாஜி நிறுவனத்துடன் தொடர்புடைய உள்வடிவமைப்பு ஒப்பந்ததாரரைப் பயன்படுத்தி தனது வீட்டில் அலமாரிகளை அமைத்த குற்றச்சாட்டு தொடர்பாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் 2018ஆம் ஆண்டில் இவர் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 3, 2026, 12:15 pm
மலாக்கா மாநில சட்டமன்றம் அம்னோ பொதுப்பேரவைக்குப் பிறகு கலைக்கப்படலாம்: அஹ்மத் ஸாஹித் ஹமிடிநம்பிக்கை
September 3, 2026, 11:24 am
16ஆவது பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி வலியுறுத்தல்
September 3, 2026, 10:31 am
கவனத்தை ஈர்த்த பிரதமரின் மனைவியின் கைப்பை
September 3, 2026, 10:24 am
எதிர்க்கட்சித் தலைவருடன் ஈமான் கட்சியின் உயர் நிலைக்குழு சந்தித்தது
September 2, 2026, 10:37 pm
மானியமில்லா பெட்ரோல், டீசல் விலைகள் 5 சென் குறைகிறது
September 2, 2026, 10:36 pm
