செய்திகள் மலேசியா
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 2.2 மில்லியன் டன் நிவாரணப் பொருட்களுடன் மெர்சி மலேசியா குழு நேபாளத்திற்கு சென்றது
காட்மண்டு:
பனிப்பாறை சரிவினால் போதே கோஷி ஆற்றுப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, மெர்சி மலேசியா ஒரு மனிதாபிமானக் குழுவை நேபாளத்திற்கு அனுப்பியுள்ளது.
இந்தப் பேரழிவு பல மாவட்டங்களில் உள்ள சமூகங்களையும் உள்கட்டமைப்புகளையும் கடுமையாகப் பாதித்துள்ளதுடன், பரவலான இடிபாடுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதையும் தடுத்துள்ளது.
இந்தக் குழு, அவசரகால உதவி, சுகாதாரம், மனநல ஆதரவு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அவசரத் தேவைகளை மதிப்பிடும்.
அதே நேரத்தில், விரைவான, ஒருங்கிணைந்த தலையீட்டை உறுதி செய்வதற்காக உள்ளூர் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படும்.
உயிர் காக்கும் உதவிகளை வழங்குவதற்கும், மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்கும் 2.2 மில்லியன் டன் நிவாரணப் பொருட்களுடன் மெர்சி மலேசியா குழு நேபாளம் சென்றுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 3, 2026, 12:15 pm
மலாக்கா மாநில சட்டமன்றம் அம்னோ பொதுப்பேரவைக்குப் பிறகு கலைக்கப்படலாம்: அஹ்மத் ஸாஹித் ஹமிடிநம்பிக்கை
September 3, 2026, 11:26 am
தபோங் ஹாஜியின் முன்னாள் தலைமை நடவடிக்கை அதிகாரி மீதான ஊழல் வழக்கு: செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
September 3, 2026, 11:24 am
16ஆவது பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி வலியுறுத்தல்
September 3, 2026, 10:31 am
கவனத்தை ஈர்த்த பிரதமரின் மனைவியின் கைப்பை
September 3, 2026, 10:24 am
எதிர்க்கட்சித் தலைவருடன் ஈமான் கட்சியின் உயர் நிலைக்குழு சந்தித்தது
September 2, 2026, 10:37 pm
மானியமில்லா பெட்ரோல், டீசல் விலைகள் 5 சென் குறைகிறது
September 2, 2026, 10:36 pm
