செய்திகள் மலேசியா
எதிர்க்கட்சித் தலைவருடன் ஈமான் கட்சியின் உயர் நிலைக்குழு சந்தித்தது
கோலாலம்பூர்:
நேற்று, மலேசியாவின் எதிர்க்கட்சித் தலைவரும், பார்ட்டி வவாசன் நெகாரா கட்சியின் தலைவருமான டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுதீனை ஈமான் கட்சியின் உயர் நிலைக் குழுவினர் அக் கட்சியின் தலைவர் டத்தோ இஸ்மாயில் தலைமையில் சந்தித்துப் பேசினர்
"கருணைமிக்க ஆளுகை" குறித்த அவரது தொலைநோக்குப் பார்வைதான் மிகவும் கவனத்தை ஈர்த்தது என்று டத்தோ இஸ்மாயில் கூறினார்.
தேசிய முன்னேற்றத்தை வெறும் புள்ளிவிவரங்கள், பொருளாதார வளர்ச்சியால் மட்டும் அளவிடாமல், மக்களின் நல்வாழ்வு, கண்ணியம், நிஜ வாழ்க்கை அனுபவங்களால் தான அளவிடலாம் என்று டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுதீன் தெளிவாக எடுத்துரைத்ததாக இஸ்மாயில் கூறினார்.
தற்போது முதிர்ச்சியான அரசியலின் தேவை என்பதை இந்த சந்திப்பு கூட்டம் உணர்த்தியது.
யாரையும் பின்தங்க விடாத ஒரு அரசாங்கத்தின் முக்கியத்துவம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என்று டத்தோ இஸ்மாயில் கூறினார்.
இந்த சந்திப்புக் கூட்டத்தில் மிகவும் வெளிப்படையான, நேர்மறையான சூழலில் பல யோசனைகளும் நுண்ணறிவுகளும் பரிமாறப்பட்டன.
மலேசியாவிடம் ஆற்றலுக்குக் குறைவில்லை. நமக்குத் தேவையானது தொலைநோக்குப் பார்வை, தைரியம்—மக்கள் மீது அக்கறை கொண்ட ஒரு தலைமை என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 3, 2026, 12:15 pm
மலாக்கா மாநில சட்டமன்றம் அம்னோ பொதுப்பேரவைக்குப் பிறகு கலைக்கப்படலாம்: அஹ்மத் ஸாஹித் ஹமிடிநம்பிக்கை
September 3, 2026, 11:26 am
தபோங் ஹாஜியின் முன்னாள் தலைமை நடவடிக்கை அதிகாரி மீதான ஊழல் வழக்கு: செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
September 3, 2026, 11:24 am
16ஆவது பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி வலியுறுத்தல்
September 3, 2026, 10:31 am
கவனத்தை ஈர்த்த பிரதமரின் மனைவியின் கைப்பை
September 2, 2026, 10:37 pm
மானியமில்லா பெட்ரோல், டீசல் விலைகள் 5 சென் குறைகிறது
September 2, 2026, 10:36 pm
