நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேப்பாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூட்டு பிரார்த்தனை: மலேசிய இந்து தர்ம மாமன்றம் & அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் ஆலயம் இணைந்து ஏற்பாடு 

கோலாலம்பூர்: 

கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நேப்பாளத்தின் ரசோவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உள்ளூர், வெளிநாட்டினர் என 1000க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

அவர்களின் இருப்பிடம், நிலை குறித்து தற்போது வரை தெரியவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் இல்லம் திரும்பவும் வெள்ளத்தால் மரணமடைந்தவர்களுக்கும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் நேற்றிரவு கோலாலம்பூர் பங்சாரில் உள்ள அருள்மிகு இராமலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது. 

வெள்ளத்தால் அதிகமான மலேசியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டுப் பிரார்த்தனை அவர்கள் நலமுடன் கண்டுபிடிக்கப்பட்டு பத்திரமாக அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இணைய வேண்டும் என்று மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் ரிஷி கூறினார். 

இந்துக்களுக்கு ஒன்று என்றால் நாம் அனைவரும் வேற்றுமைகளைக் கடந்து இந்த இக்கட்டான சூழலில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

இந்த கூட்டுப்பிரார்த்தனையில் இந்து சமயவாதிகள், இந்து தர்ம மாமன்ற உறுப்பினர்கள், ஆலய பொறுப்பாளர்கள், குருக்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரார்த்தனை மேற்கொண்டனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset