செய்திகள் மலேசியா
மானியமில்லா பெட்ரோல், டீசல் விலைகள் 5 சென் குறைகிறது
புத்ராஜெயா:
மானியமில்லா ரோன் 97, ரோன் 95 பெட்ரோல், டீசலின் சில்லறை விலைகள் நாளை முதல் 5 சென் குறைகிறது.
ரோன் 97 பெட்ரோல் ஒரு லிட்டர் 4.25 ரிங்கிட்டுக்கும், ரோன் 95 மானியமில்லா பெட்ரோல் ஒரு லிட்டர் 3.77 ரிங்கிட்டுக்கும் விற்கப்படுவதாக நிதியமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதே சமயம், மானியமில்லா டீசல் ஒரு லிட்டர் 4.67 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது. இந்த விலைகள் அனைத்தும் செப்டம்பர் 9 வரை அமலில் இருக்கும்.
இதற்கிடையில், மானிய விலையில் வழங்கப்படும் எரிபொருளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
பூடிI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரோன்95 எரிபொருள் ஒரு லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற விலையிலும், பூடி டீசல் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் டீசல் ஒரு லிட்டருக்கு 2.10 ரிங்கிட் என்ற விலையிலும் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், மானிய பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பு, மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றிற்கான மானிய விலைகளும் முறையே ஒரு லிட்டருக்கு 2.05 ரிங்கிட், ஒரு லிட்டருக்கு 2.15 ரிங்கிட் என மாற்றமின்றி உள்ளன என நிதியமைச்சு கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 2, 2026, 10:36 pm
பள்ளிகளில் இனி அழகான போட்டிகளுக்கு இடமில்லை; ஆசிரியர்கள் மீண்டும் கற்பித்தலில் கவனம் செலுத்த வேண்டும்: ஃபட்லினா
September 2, 2026, 10:36 pm
நாட்டில் மேலும் அந்நியத் தொழிலாளர்கள் தேவையில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
September 2, 2026, 10:35 pm
இருதய நோய் மருந்துகளால் தூக்கக் கலக்கத்தில் இருந்த ஓட்டுநரால் பேருந்து விபத்துக்குள்ளானது
September 2, 2026, 6:26 pm
பாராங் கத்தியை பயன்படுத்தி கலவரம்: நான்கு நண்பர்களுக்கு 2,900 ரிங்கிட் அபராதம்
September 2, 2026, 5:46 pm
இந்தோனேசியா சினபுங் எரிமலை வெடிப்பு: 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
September 2, 2026, 5:25 pm
