நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி வலியுறுத்தல் 

கோலாலம்பூர்: 

15ஆவது நாடாளுமன்ற பதவிக்காலம் முடியும் வரை காத்திருக்காமல், 16ஆவது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்துமாறு தேசிய முன்னணி, அம்னோ கட்சிகள் பிரதமர் அன்வாரை கேட்டுக்கொண்டுள்ளன.

முன்கூட்டியே தேர்தலை நடத்துவது தான் தற்போதைய அரசியல் சூழலில் பொருத்தமான ஒன்றாக அமையும் என்று தேசிய முன்னணி தலைவருமான டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி சொன்னார். 

நடப்பு கூட்டரசு அரசாங்கத்தின் பதவிக்காலம் 2027 டிசம்பரில் முடிவடடைவதால், 60 நாட்களுக்குள் அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதன் அடிப்படையில், மலேசியாவின் 16-ஆவது பொதுத் தேர்தல் தாமதமாக பிப்ரவரி 2028-க்குள் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

2022 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தொங்கு நாடாளுமன்றச் சூழலில் பாக்கத்தான் ஹராப்பானுடன் இணக்கம் கண்டு அரசாங்கத்தை அமைப்பதில் பாரிசான் முக்கியப் பங்கு வகித்தது.

எதிர்காலக் கூட்டணிகள் குறித்துப் பேசிய ஜாஹித், ஜோகூர் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட்ட போதிலும், நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களில் கூட்டணி அமைப்பதே பயனுள்ளதாக இருந்தது என்றார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset