செய்திகள் மலேசியா
புகைமூட்டத்தின் விளைவாக கூச்சிங் கடைகளில் அதிக அளவில் தண்ணீர் பாட்டில்கள், வைட்டமின் சி மிட்டாய்களை வாங்கும் மக்கள்
கூச்சிங்:
கூச்சிங்கில் நிலவும் புகைமூட்டத்தால், உள்ளூர் பல்பொருள் அங்காடிகளில் தண்ணீர் பாட்ட்டில்கள், சுகாதாரப் பொருட்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஃபார்லி கூச்சிங், ஈமார்ட் பத்து காவா போன்ற சில்லறை விற்பனையாளர்கள், இதுவரை தட்டுப்பாடுகளையோ அல்லது விலை உயர்வுகளையோ சந்திக்காதபோதிலும், தங்கள் சரக்குகளை மீண்டும் நிரப்பும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மக்கள் அதிகம் தண்ணீர் பாட்டில்களை வாங்கிச் செல்வதாகக் கூறுகின்றனர்.
வாடிக்கையாளர்கள் குறிப்பாக, குளிர்ச்சியூட்டும் பானங்கள், முகக்கவசங்கள், வைட்டமின் சி மிட்டாய்கள், வைட்டமின் சத்து நிறைந்த பழங்கள் போன்ற சுகாதாரப் பொருட்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
தற்போது போதுமான கையிருப்பு இருந்தாலும், வறண்ட நிலை தொடர்ந்தால் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற கவலை அங்கு நிலவுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 3, 2026, 12:15 pm
மலாக்கா மாநில சட்டமன்றம் அம்னோ பொதுப்பேரவைக்குப் பிறகு கலைக்கப்படலாம்: அஹ்மத் ஸாஹித் ஹமிடிநம்பிக்கை
September 3, 2026, 11:26 am
தபோங் ஹாஜியின் முன்னாள் தலைமை நடவடிக்கை அதிகாரி மீதான ஊழல் வழக்கு: செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
September 3, 2026, 11:24 am
16ஆவது பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி வலியுறுத்தல்
September 3, 2026, 10:31 am
கவனத்தை ஈர்த்த பிரதமரின் மனைவியின் கைப்பை
September 3, 2026, 10:24 am
எதிர்க்கட்சித் தலைவருடன் ஈமான் கட்சியின் உயர் நிலைக்குழு சந்தித்தது
September 2, 2026, 10:37 pm
மானியமில்லா பெட்ரோல், டீசல் விலைகள் 5 சென் குறைகிறது
September 2, 2026, 10:36 pm
