நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியா சினபுங் எரிமலை வெடிப்பு: 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் 

மேடான்: 

இந்தோனேசியாவின் வட சுமாத்ரா மாகாணத்தில் அமைந்துள்ள 'சினாபுங்'  எரிமலை, புதன்கிழமை காலை மீண்டும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.

இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 600க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எரிமலைச் சீற்றம் மற்றும் புவியியல் அபாய தணிப்பு மையத்தின் அறிக்கையின்படி, இந்த எரிமலை வெடிப்பு உள்ளூர் நேரப்படி காலை 7.20 மணிக்குத் தொடங்கியுள்ளது.

வெடிப்பின் போது எரிமலையின் உச்சியிலிருந்து சுமார் 1,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை கிளம்பியது.

மேலும், இந்தச் சாம்பல் புகையானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,460 மீட்டர் உயரம் வரை உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானத்தை நோக்கி உயர்ந்த சாம்பல் மேகம் அப்பகுதி முழுவதும் அடர்த்தியாகக் பரவியது.

எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் புகை அடர்ந்த சாம்பல் நிறத்திலும் பழுப்பு நிறத்திலும் காணப்பட்டது.

இந்தச் சாம்பல் மேகங்கள் கிழக்கிலும் தென்கிழக்கு திசையிலும் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினாபுங் எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தவிர்க்குமாறும், இந்தோனேசிய அதிகாரப்பூர்வ அமைப்புகள் பிறப்பிக்கும் அனைத்துப் பாதுகாப்பு உத்தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் தவறாமல் பின்பற்றுமாறு மலேசியத் தூதரகம் மலேசியக் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset