செய்திகள் மலேசியா
நாட்டில் மேலும் அந்நியத் தொழிலாளர்கள் தேவையில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
புத்ராஜெயா:
நாட்டில் மேலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சேர்க்க தற்போது தேவை இல்லை.
2030ஆம் ஆண்டுக்குள் மொத்தப் பணியாளர்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 10% ஆகக் குறைப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று மனிதவளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கூறினார்.
இந்த மாத இறுதியில் தொடங்கி ஆறு மாத காலத்திற்குள், மலேசியாவால் சுமார் 200,000 வங்கதேசத் தொழிலாளர்கள் படிப்படியாகப் பணியமர்த்தப்படுவார்கள் என்று வங்காளதேசத் துணையமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்த அறிக்கை குறித்து டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த எண்ணிக்கை நாட்டின் தற்போதைய தேவைகளைப் பிரதிபலிக்கவில்லை என்றும் கூறினார்.
ஆறு மாதங்களில் 2 லட்சம் பேர் வருகிறார்கள் என்பது அர்த்தமற்றது.
அப்படியென்றால், ஒவ்வொரு நாளும் கூடுதலாக 1,000 வங்காளதேசிகளை மலேசியாவிற்குள் கொண்டு வருகிறோம் என்பதா? இது தர்க்கரீதியானது அல்ல, இதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து தனது பங்களாதேஷ் சகாவுடனும் விவாதித்ததாகவும், அந்த அறிக்கையில் குழப்பம் நிலவியதைக் கண்டறிந்ததாகவும் டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 2, 2026, 10:37 pm
மானியமில்லா பெட்ரோல், டீசல் விலைகள் 5 சென் குறைகிறது
September 2, 2026, 10:36 pm
பள்ளிகளில் இனி அழகான போட்டிகளுக்கு இடமில்லை; ஆசிரியர்கள் மீண்டும் கற்பித்தலில் கவனம் செலுத்த வேண்டும்: ஃபட்லினா
September 2, 2026, 10:35 pm
இருதய நோய் மருந்துகளால் தூக்கக் கலக்கத்தில் இருந்த ஓட்டுநரால் பேருந்து விபத்துக்குள்ளானது
September 2, 2026, 6:26 pm
பாராங் கத்தியை பயன்படுத்தி கலவரம்: நான்கு நண்பர்களுக்கு 2,900 ரிங்கிட் அபராதம்
September 2, 2026, 5:46 pm
இந்தோனேசியா சினபுங் எரிமலை வெடிப்பு: 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
September 2, 2026, 5:25 pm
