செய்திகள் மலேசியா
பாஸ் கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியத் தலைவர் சாததுல்லாஹ் ஹுசைனி உரை நிகழ்த்துகிறார்
கோத்தபாரு:
பாஸ் கட்சியின் 73ஆவது ஆண்டுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியத் தலைவர் செய்யது சாததுல்லாஹ் ஹுசைனி கலந்துகொண்டு உரை நிகழ்த்துகிறார்.
நாளை செப்டம்பர் 3 ஆம் தேதி பிற்பகல் 2.00 மணிக்கு கிளந்தான் மாநிலத் தலைநகர் கோத்தபாருவில் உள்ள பெர்டானா தங்குவிடுதியில் இந்த ஆண்டுக் கூட்டம் துவங்க உள்ளது.
இரு நாட்கள் நடைபெறும் இக் கூட்டத்திற்கு பாஸ் கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ ஹாதி அவாங் தலைமை தாங்குகிறார் என்று மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அமீனுர்ரஷீத் பின் யாத்திபான் கூறினார்.
முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த கண்ணோட்டங்களைப் பரிமாறிக்கொள்வது, மூலோபாய சர்வதேச வலையமைப்புகளை வலுப்படுத்துவது, குறிப்பாக பாலஸ்தீனம், ஈரான் விவகாரங்களில் ஒருமித்த ஒற்றுமைக் குரலை முன்னெடுத்துச் செல்வது போன்ற விவகாரங்கள் இந்த ஆண்டுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
மாநாட்டில் கலந்துகொள்ள நாட்ய் முழுவதிலும் இருந்து பாஸ் கட்சியின் தொண்டர்கள் கோத்தபாரு நோக்கி பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 2, 2026, 10:37 pm
மானியமில்லா பெட்ரோல், டீசல் விலைகள் 5 சென் குறைகிறது
September 2, 2026, 10:36 pm
பள்ளிகளில் இனி அழகான போட்டிகளுக்கு இடமில்லை; ஆசிரியர்கள் மீண்டும் கற்பித்தலில் கவனம் செலுத்த வேண்டும்: ஃபட்லினா
September 2, 2026, 10:36 pm
நாட்டில் மேலும் அந்நியத் தொழிலாளர்கள் தேவையில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
September 2, 2026, 10:35 pm
இருதய நோய் மருந்துகளால் தூக்கக் கலக்கத்தில் இருந்த ஓட்டுநரால் பேருந்து விபத்துக்குள்ளானது
September 2, 2026, 6:26 pm
பாராங் கத்தியை பயன்படுத்தி கலவரம்: நான்கு நண்பர்களுக்கு 2,900 ரிங்கிட் அபராதம்
September 2, 2026, 5:46 pm
இந்தோனேசியா சினபுங் எரிமலை வெடிப்பு: 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
September 2, 2026, 5:25 pm
