செய்திகள் மலேசியா
ஃபெல்டா, துணை நிறுவனங்கள் உட்படுத்திய ஊழல் விவகாரம்: ஏழு விசாரணை அறிக்கைகளைத் திறந்தது எம்.ஏ.சி.சி
பெட்டாலிங் ஜெயா:
ஃபெல்டா, அதன் சார்ந்த துணை நிறுவனங்களை உட்படுத்திய ஊழல், அதிகார துஷ்பிரயோகம், நிதி முறைக்கேடு தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஏழு விசாரணை அறிக்கைகளை திறந்துள்ளது
2010 முதல் 2020ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட பணபரிவர்த்தனைகள், முதலீட்டு நடவடிக்கைகள் குறித்து பெரிய அளவிலான விசாரணைகள் தீவிரம் காட்டப்படும் என்று எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் அப்துல் ஹலிம் அமான் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆறு விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு விசாரணை அறிக்கை திறக்கப்பட்டது இன்னும் இருக்கிறது என்று விளக்கமளித்தார்.
தவறான நிர்வாகம் மற்றும் அதீத அரசியல் தலையீடு காரணமாக ஃபெல்டா நிறுவனம் கிட்டத்தட்ட 10 பில்லியன் ரிங்கிட் இழப்பைச் சந்தித்துள்ளதாக கடந்த மாதம் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஃபெல்டா அமைப்பு எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்த கண்டுபிடிப்புகள் அடங்கிய, அந்த அமைப்பு மீதான ஒரு சிறப்புப் பணிக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்றும் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 2, 2026, 10:37 pm
மானியமில்லா பெட்ரோல், டீசல் விலைகள் 5 சென் குறைகிறது
September 2, 2026, 10:36 pm
பள்ளிகளில் இனி அழகான போட்டிகளுக்கு இடமில்லை; ஆசிரியர்கள் மீண்டும் கற்பித்தலில் கவனம் செலுத்த வேண்டும்: ஃபட்லினா
September 2, 2026, 10:36 pm
நாட்டில் மேலும் அந்நியத் தொழிலாளர்கள் தேவையில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
September 2, 2026, 10:35 pm
இருதய நோய் மருந்துகளால் தூக்கக் கலக்கத்தில் இருந்த ஓட்டுநரால் பேருந்து விபத்துக்குள்ளானது
September 2, 2026, 6:26 pm
பாராங் கத்தியை பயன்படுத்தி கலவரம்: நான்கு நண்பர்களுக்கு 2,900 ரிங்கிட் அபராதம்
September 2, 2026, 5:46 pm
