நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இருதய நோய் மருந்துகளால் தூக்கக் கலக்கத்தில் இருந்த ஓட்டுநரால் பேருந்து விபத்துக்குள்ளானது

தாப்பா:

இருதய நோய்க்கான மருந்துகளின் தாக்கத்தால் பேருந்து ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததாகக் கருதப்படுகிறது.

இதன் காரணமாக இன்று இங்குள்ள வடக்கு - தெற்கு  நெடுஞ்சாலையின் பீடோர்-தாப்பா அருகே பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மையத்தடுப்பில் மோதியது.

தாப்பா மாவட்டக் போலிஸ் தலைவர், அப்துல் மாலிக் ஹசிம், மதியம் சுமார் 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்த தகவல் தமது துறைக்குக் கிடைத்ததாகக் கூறினார்.

சிலாங்கூர் காஜாங்கிலிருந்து கெடா, கூலிமிற்கு பயணிகள் இல்லாமல் பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ஆரம்பகட்ட காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​வலதுபுறப் பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியதாக நம்பப்படுகிறது.

பேருந்து ஓட்டுநருக்குக் காயமில்லை என்றும், அவர் சிகிச்சைக்காக தபா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது என அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset