நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் ஆதரவு அளப்பரியது; மீபா இளையோர் கால்பந்து போட்டியில் 30 குழுக்கள் பங்கேற்பு: அன்பானந்தன்

கோலாலம்பூர்:

மீபா பியோண்ட் இளையோர் கால்பந்து போட்டியில் 30 குழுக்கள் பங்கேற்கவுள்ளனர்.

மீபா தலைவர் அன்பானந்தன் இதனை தெரிவித்தார்.


மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி 12 வயதுக்கு உட்பட்ட இளையோர் கால்பந்து போட்டி பினாங்கு போலோ கிளப்பில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

ஆண்கள் பிரிவில் 20 குழுக்கள், பெண்கள் பிரிவில் 10 குழுக்கள் கலந்து கொள்கின்றன.

கடந்த ஆண்டை போல் இவ்வாண்டும் மீபா பியோண்ட் கால்பந்து போட்டிக்கு மஇகா, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் வழங்கி வரும் ஆதரவு பெரும் உற்சாகத்தை அளிக்கிறது என்று

மேலும் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு 30,000 வெள்ளி மானியம் வழங்கி உள்ளது.

இது தவிர நல்லுள்ளம் கொண்டவர்கள் ஆதரவு வழங்கி வருகிறார்கள்.

பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ வெற்றி பெறும் குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கி சிறப்பிப்பார்.

ஆகவே பினாங்கு சுற்று வட்டார மக்கள் திரளாக வந்து இப்போட்டிக்கு ஆதரவு தருமாறு அன்பானந்தன் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset