செய்திகள் வணிகம்
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
சிங்கப்பூர்:
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள் இந்த அரையாண்டில் பெருமளவில் அதிகரித்துள்ளன.
சிங்கப்பூர் அதிகமான வேண்டாத துணிமணிகளை மறுபயனீட்டிற்காக மலேசியாவிற்கு தொடர்ந்து அனுப்புகிறது.
ஈராண்டுக்கு முன்னருடன் ஒப்பிடும்போது அந்த எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு வாரமும் 70 டன் வரையிலான துணிகள் Life Line Clothing நிறுவனத்திற்கு அனுப்பப்படுகின்றன.
அவை மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன; மறுபயனீடு செய்யப்படுகின்றன.
சமூகத் தொழில் நிறுவனமான Cloop இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதன் மஞ்சள் நிறத் தொட்டிகளில் சேகரிக்கப்படும் துணிமணிகள் மலேசியாவின் கிள்ளான் வட்டாரத்தில் அமைந்துள்ள நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.
அங்குள்ள ஊழியர்கள் துணிமணிகள் மறுவிற்பனைக்குப் பொருத்தமானவையா என்பதை ஆராய்ந்து முடிவெடுப்பர்.
மறுவிற்பனைக்கு உகந்த பெரும்பாலான துணிமணிகள் குறைந்த எடை கொண்டவை.
அதோடு பிள்ளைகளின் ஆடைகளுக்கும் தேவை இருக்கிறது.
நல்ல நிலைமையில் இருக்கும் ஆடம்பரத் துணிமணிகளையும் மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.
அதிக எடை கொண்ட திரைச்சீலை, போர்வை, குறுகிய காலத்திற்குப் பயன்படுத்தக்கூடிய துணிமணிகள் ஆகியவற்றை மீண்டும் விற்பது சிரமம்.
மீண்டும் விற்கக்கூடிய நிலையில் இருக்கும் துணிமணிகள் பின்னர் வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
இறுதிக்கட்ட நடவடிக்கையாக, மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள துணிகள் மின்சார உற்பத்திக்காக எரிக்கப்படுகின்றன.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
