செய்திகள் இந்தியா
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
புதுடெல்லி:
இந்தியப் பகுதிக்குள் சீனா ஊடுருவியுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, மோடி அரசு வெளிப்படையாக விளக்கம் அளித்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
வழக்கம்போல இந்தத் தகவல்கள் தவறானவை என்று அரசு மறுத்துள்ளது. ராணுவம் தனது கடமையை சிறப்பாகச் செய்து வரும் நிலையில், சீனாவுடனான எல்லை தொடர்பான முக்கியமான கேள்விகளுக்கு மத்திய அரசு தெளிவான தகவல்களை வழங்கவில்லை.
அயோத்தி ராமர் கோயிலுக்கு மக்கள் வழங்கிய காணிக்கை எவ்வளவு? எவ்வளவு தங்கம், வெள்ளி மற்றும் பிற விலைமதிப்புமிக்க பொருட்கள் சேகரிக்கப்பட்டன? அந்த சொத்துகளின் கணக்கு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.
கீழ்நிலையில் உள்ள சிலரை மட்டும் சிறையில் அடைப்பதால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடாது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
இளைஞர்களின் பிரச்சினைகள்:
மேலும், அரசின் தவறான கொள்கைகளே இளைஞர்களை ஆழ்ந்த விரக்திக்குள் தள்ளியுள்ளன. மத ரீதியான பதற்றத்தை உருவாக்கும் போட்டிக்கும், இலவசத் திட்டங்களுக்கான போட்டிக்கும் மத்தியில், இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மிகக் கடுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் நாடு முழுவதும் 94,000 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
உயர்கல்வி தொடர்ந்து அதிக செலவு மிக்கதாக மாறி வருகிறது. கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.
மேலும், மாணவர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு அரசு உரிய கவனம் செலுத்தாமல் இருப்பதாலேயே மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராடும்நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு கார்கே கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
