செய்திகள் இந்தியா
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
நாக்பூர்:
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து தமிழகத்தைச் சோ்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் வானதி சீனிவாசன் நீக்கக்கப்பட்டு அப் பதவிக்கு ரூப் குமாரியை அக்கட்சி மேலிடம் நியமித்துள்ளது.
பாஜகவில் அமைப்பை ரீதியாக கட்சியைப் பலப்படுத்தும் வகையில் புதிய தேசிய நிா்வாகிகள், தலைவா்களை தேசிய தலைவா் நிதின் நபின் நியமித்துள்ளதாக அக் கட்சியின் தேசிய பொதுச் செயலா் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
அதில் மேலும் கூறியிருப்பதாவது:
கட்சியின் துணைத் தலைவா்கள், பொதுச்செயலா், பொருளாளா் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கும் புதிய நிா்வாகிகளை பாஜக மேலிடம் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜே, முன்னாள் மத்திய அமைச்சா் புரந்தேஸ்வரி, ராம் மாதவ் போன்றோா் தேசிய துணைத் தலைவா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இதன்படி, பாஜக அமைப்பு பொதுச்செயலராக பி.எல்.சந்தோஷ் தொடா்ந்து நீடிக்கிறாா். அமைப்பின் இணை பொதுச்செயலா்களாக மும்பையைச் சோ்ந்த சிவபிரகாஷ், சண்டீகரைச் சோ்ந்த செளதான் சிங் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தேசிய பொதுச்செயலா்களாக மகாராடிரத்தைச் சோ்ந்த வினோத் தாவ்டே, தில்லியைச் சோ்ந்த சுனில் பன்சால், திரிபுராவைச் சோ்ந்த விபலவ் குமாா் தேவ், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் ஸ்மிரிதி இரானி உள்பட 8 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தேசிய செயலா்களாக தமிழகத்தைச் சோ்ந்த டாக்டா் எம். வெங்கடேசன் உள்பட 16 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். கட்சியின் தேசிய பொருளாளராக மத்திய அமைச்சா் பியூஷ் கோயலும் இணை பொருளாளராக ராஜேஷ் மங்கலும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதேபோல அணிகளின் தலைவா்களும் மாற்றப்பட்டுள்ளனா். தேசிய மகளிா் அணி தலைவராக இருந்த வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சத்தீஸ்கரைச் சோ்ந்த ரூப் குமாரி சௌத்ரி புதிய தேசிய மகளிா் அணி தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளாா். ஊடக அமைப்பாளராக அனில் பலூனி தொடா்ந்து அப் பதவியிலேயே நீடிக்கிறாா்.
இந்த நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக பாஜக மேலிடம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
