செய்திகள் தமிழ் தொடர்புகள்
அரசுப் பள்ளியின் காலை உணவில் பல்லி: உணவு சமைத்த தனியார் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்
சென்னை:
பூந்தமல்லியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி இறந்து கிடந்தது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தனியார் கேட்டரிங் நிறுவனத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், தனியார் கேட்டரிங் நிறுவனம், பூந்தமல்லி அடுத்த மாங்காடு பகுதியில் உள்ள உணவு தயாரிப்பு கூடத்தில் காலை உணவைத் தயாரித்து, பூந்தமல்லி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 12 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1,300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு வழங்கி வருகிறது.
கடந்த 24-ஆம் தேதி இந்நிறுவனம் விநியோகித்த காலை உணவில் பல்லி இறந்து கிடந்ததால், 19 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவின் பேரில், பூந்தமல்லி நகராட்சி ஆணையர் தாமோதரன், சம்பந்தப்பட்ட தனியார் கேட்டரிங் நிறுவனத்துக்கு நேற்று ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.
மேலும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் காலை உணவை ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் சோதனை செய்த பிறகு மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 3, 2026, 3:14 pm
சென்னை விமான நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் மதிப்புடைய 3.45 கிலோ கஞ்சா கடத்த முயற்சி: மலேசிய ஆடவர் கைது
September 3, 2026, 2:07 pm
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
September 2, 2026, 2:55 pm
மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாள்களாக உயா்த்தியது தமிழக அரசு
August 30, 2026, 9:40 pm
தமிழகத்தில் செப்.3 வரை அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி வரை உயரும்: சென்னை வானிலை நிலையம் அறிவிப்பு
August 25, 2026, 10:02 pm
