நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா தேசிய தினம் 2026: புத்ராஜெயாவில் நாளை முதல் சாலைகள் மூடப்படுகின்றன; இரண்டு பாலங்கள் மட்டுமே திறந்திருக்கும்

புத்ராஜெயா:

69-ஆவது சுதந்திர தின (மெர்டேகா) கொண்டாட்டங்கள், 2026-ஆம் ஆண்டின் தேசிய தின நிகழ்வுகளை முன்னிட்டு, கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய இடங்களில் பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடுகளை மலேசிய அரச காவல் துறை (PDRM) பலப்படுத்தி வருகிறது.

இதையொட்டி ஒத்திகைகளுக்காக முக்கிய சாலைகள் மூடப்படவுள்ளன.
புத்ராஜெயாவில் உள்ள 'பெர்சியாரன் பெர்தானா' (Persiaran Perdana) உட்பட பிற முக்கிய சாலைகள் ஆகஸ்ட் 25 முதல் 31 வரை மூடப்பட்டிருக்கும் என்று கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ ஃபடில் மார்சஸ் அறிவித்துள்ளார். 

மேலும், பொதுமக்கள் இலவச ஷட்டில் பேருந்து சேவையைப் பயன்படுத்துமாறும், அனுமதி பெறாத ட்ரோன்களை (drone) இயக்குவதைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புத்ராஜெயாவில் 2,357 காவல் துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவதுடன், கோலாலம்பூரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்கள் அல்லது கேள்விகளுக்கு, இதற்கென ஒதுக்கப்பட்ட காவல் துறை உதவி எண்களைத் (hotlines) தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset