நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷா ஆலாமில் பயங்கர கைகலப்பு: ஓர் ஆடவர் கைது, சந்தேக நபர் மரணம்

ஷா ஆலாம்: 

ஷா ஆலாம், தாமான் ஆலாம் மேகாவில் இன்று நிகழ்ந்த பயங்கர கைகலப்பு சம்பவத்தில் ஒரு சந்தேக நபர் மரணமடைந்த வேளையில் கைகலப்பில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஓர் ஆடவரைக்  காவல்துறையினர் கைது செய்தனர் 

ஷா ஆலாம் போலிஸ் தலைவர் சருடின் சாமா இதனை உறுதிப்படுத்தினார். 

மதியம் 2 மணியளவில் ஒரு குழு இந்த கைகலப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் பாதிக்கப்பட்ட நபரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டார் என்று அவர் விளக்கம் அளித்தார். 

இந்த கைகலப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு நபரின் நிலை இன்னும் தெரியவில்லை. 

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302இன் கொலை குற்றச்சாட்டாக இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது என்று போலிஸ் தரப்பு தெரிவித்தது. 

மேலும், கைகலப்பு சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் விபரங்களைத் தெரிவிக்கலாம் என்று அவர் சொன்னார். 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset