நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காஷ்மீர் பத்திரிகையாளர் மன்ற நிலத்தை திரும்ப பெற்றது அரசு: பத்திரிகையாளர்கள் கண்டனம்

ஸ்ரீநகர்:

காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்துக்கு இரு தரப்பினர் உரிமை கொண்டாடியதால், மன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ரத்து செய்து அந்த யூனியன் பிரதேசத்தின் நிர்வாகம் திரும்பப் பெற்றது.

"ஜனநாயகத்தின் குரலாக செயல்பட்டு வந்த பத்திரிகையாளர் மன்றத்தை மூட வேண்டும் என்ற நோக்கத்திலேயே அரசு நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது' என்று பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

2019, ஜூலை மாதத்துக்கு பிறகு காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்துக்கு தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Kashmir Press Club: J&K admin dissolves Kashmir Press Club, hands over its  land to estate dept - The Economic Times

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில பத்திரிகையாளர் குழுவினர் சனிக்கிழமை போலீஸôருடன் பத்திரிகையாளர் மன்றத்துக்குள் நுழைந்து தாங்கள்தான் புதிய நிர்வாகத்தின் பிரதிநிதிகள் என்று கூறியதால் சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து, "போலோ வீவ்' என்ற இடத்தில் பத்திரிகையாளர் மன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கான உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஆகையால், இந்த மன்றத்தின் பெயரை வைத்து அறிக்கைகள் வெளியிட்டால் அது சட்ட விரோதமாகும்' என்று யூனியன் பிரதேச அரசு அறிவித்தது.

இந்தச் சவாலை காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம் எதிர்கொள்ளும் என்றும் பத்திரிகையாளர் மன்றத்தை மூட வேண்டும் என்பதற்காகவே எதிர்ப்பு பத்திரிகையாளர் குழு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் முந்தைய பத்திரிகையாளர் மன்ற நிர்வாகத்தின் பொதுச் செயலர் இஷ்பக் தான்தரே தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset