செய்திகள் விளையாட்டு
தேசிய ஹாக்கி ஜாம்பவான் சர்ஜித் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்: மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு இரங்கல்
கோலாலம்பூர்:
மலேசிய ஹாக்கி விளையாட்டின் தலைசிறந்த ஆட்டக்காரரும் முன்னாள் தேசிய பயிற்றியாளருமான சர்ஜித் சிங் தனது 63ஆவது அகவையில் உடல்நலக்குறைவால் காலமானார்.
இவரின் திடீர் மறைவு மலேசிய விளையாட்டுத் துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெருத்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தலைநகரிலுள்ள UKM CANSELOR TUANKU MUHRIZ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சர்ஜித் சிங், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 10 மணியளவில் காலமானார்
கடந்த 1984ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் 1992ஆம் ஆண்டு பார்சிலோனா ஆகிய இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இவர் மலேசியாவிற்காக களம் கண்டார்.
அதுமட்டுமல்லாமல், 1982 புதுடெல்லி, 1990 பெய்ஜிங் ஆசியா விளையாட்டு போட்டிகளில் மலேசியா வெண்கலப் பதக்கம் வெல்ல முக்கிய பங்காற்றினார்.
2007 முதல் 2008 வரை தேசிய ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பு வகித்தார்.
அதன் தொடர்ச்சியாக, மீண்டும் மார்ச் 2024 முதல் மார்ச் 2026 வரையிலான காலக்கட்டத்தில் தேசிய அணியை வழிநடத்தும் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார்.
அன்னாரின் மறைவிற்கு மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் கூறியுள்ளது.
இந்தத் துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினர் அமைதியையும் திடமான மனநிலையையும் பெற வேண்டும் என அமைப்பால் பிராத்திக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 9:39 am
அர்ஜெண்டினா ஜெர்சியை நினைத்து ஏங்குவதாக மெஸ்ஸி ஒப்புக்கொண்டார்
October 8, 2026, 9:37 am
மெஸ்ஸியின் கால்பந்து மரபுக்கு ரொனால்டோ மரியாதை செலுத்துகிறார்
October 7, 2026, 4:40 pm
கண்ணீருடன் விடைபெற்ற மெஸ்ஸி: கடைசி ஆட்டத்திலும் கோல்
October 7, 2026, 9:20 am
இங்கிலாந்து அணிக்காக 125ஆவது ஆட்டத்தில் களமிறங்கிய ஹாரி கேய்ன் இரண்டு கோல்களுடன் கொண்டாடினார்
October 7, 2026, 8:51 am
ஜேசுஸ் மீதான ஏமாற்றம் இருந்தபோதிலும் ரொனால்டோ போர்த்துகல் அணிக்கு விசுவாசமாக இருக்கிறார்
October 6, 2026, 9:17 am
தோல்வியடையாத பயணம் ஹரிமாவ் மலாயா அணிக்கு உத்வேகத்தை அளிக்கிறது
October 6, 2026, 9:14 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
October 5, 2026, 12:28 pm
மலேசியாவிற்கு பார்முலா 1 மீண்டும் திரும்ப சிப்பாங் பந்தயத் தளம் வழி திறக்கிறது: எப்ஐஏ தலைவர்
October 5, 2026, 9:00 am
அர்ஜெண்டினா மெஸ்ஸியின் நீண்ட கால சாகப்தம் முடிவுக்கு வருகிறது
October 5, 2026, 8:57 am
