நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிராந்திய, உலகளாவிய பதற்றங்களைத் தணிப்பதில் மலேசியாவும் பாகிஸ்தானும் ராஜதந்திர அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றன: சைஃபுதீன்

புத்ராஜயா:

உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுதியன் இஸ்மாயில், பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சையத் ஆசிம் முனீர் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின் போது, ​​மோதல்களைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதில் மலேசியா, பாகிஸ்தானின் அனுபவங்கள் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சைஃபுதீன் நசுதியனின் பாகிஸ்தான் பயணத்தின் போது, ​​ராவல்பிண்டியில் உள்ள பொதுத் தலைமையகத்தில் சையத் ஆசிமுடனான இந்த சந்திப்பு நடைபெற்றது.

உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுதியன் , பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி சையத் ஆசிம் முனீர் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின் போது, ​​மலேசியாவும் பாகிஸ்தானும் மோதல் தீர்வு பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதித்தன.

ராஜதந்திர அணுகுமுறைகள், அமைதி உருவாக்கும் முயற்சிகள் உட்பட, பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு குறித்த கருத்துப் பரிமாற்றத்திற்கு இந்த சந்திப்பு வழிவகுத்தது.

பதட்டங்களைத் தணிப்பதில் ராஜதந்திரம் , உரையாடலின் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் வலியுறுத்தின, மேலும் பேச்சுவார்த்தைகள் மூலம் மோதல் தீர்விற்கு ஆதரவளிக்க மலேசியா உறுதியளித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset