செய்திகள் மலேசியா
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
கோலாலம்பூர்:
பள்ளி விடுமுறைகள், தேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, KTMB ரயில் சேவைகள் பட்டர்வர்த், படாங் பெசார் வழித்தடத்தில் வியாழக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை (ஆகஸ்ட் 27-31) கூடுதலாக எட்டு KTM கொம்யூட்டர் வடக்கு ரயில் சேவைகளை வழங்குகிறது.
இந்தக் காலகட்டத்தில் பயணிகளின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், KTM கொம்யூட்டர் வடக்கு மண்டல சிறப்பு நேர அட்டவணையைச் செயல்படுத்துவதன் மூலம் இந்தக் கூடுதல் சேவைகள் வழங்கப்படுவதாக KTMB அறிவித்தது.
இந்த நடவடிக்கையின் மூலம், பட்டர்வர்த்-படாங் பெசார்-பட்டர்வர்த் வழித்தடத்தில் ஒரு நாளைக்கு இயக்கப்படும் மொத்த சேவைகளின் எண்ணிக்கை 38-லிருந்து 46-ஆக அதிகரிக்கும் என்றும் அது மேலும் கூறியது.
இந்த முன்னெடுப்பின் மூலம், சாதாரண நாட்களுடன் ஒப்பிடுகையில் பயணிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரிக்கும் என KTMB எதிர்பார்க்கிறது. இந்த சேவைகள் மூலம் ஒரு நாளைக்கு 5,000 கூடுதல் பயணிகள் வரை பயணிக்க முடியும், அல்லது இந்தச் சேவை செயல்படுத்தப்படும் காலம் முழுவதும் மொத்தமாக 25,000 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.
மொத்தத்தில், படாங் பெசார்-பட்டர்வர்த் வழித்தடத்திற்கு நான்கு கூடுதல் சேவைகள் வழங்கப்படும். இதன் மூலம், வழக்கமான கால அட்டவணையின்படி ஒரு நாளைக்கு 19 சேவைகள் வழங்கப்படும் நிலையில், மொத்த சேவைகளின் எண்ணிக்கை 23 ஆக உயரும்.
"பட்டர்வர்த்-படாங் பெசார் வழித்தடத்திற்கும் நான்கு கூடுதல் சேவைகள் வழங்கப்படும், இதன் மூலம் ஒரு நாளைக்கு மொத்த சேவைகளின் எண்ணிக்கை 23 ஆக உயரும்," என்றும் அது மேலும் கூறியது.
இந்தக் கூடுதல் சேவைகள், பொதுப் போக்குவரத்துத் திறனை அதிகரிப்பதற்கும், குறிப்பாகப் பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் தேசிய தினக் கொண்டாட்டங்களின் போது பினாங்கு, கெடா மற்றும் பெர்லிஸ் இடையேயான பயணங்களுக்குப் பயணிகளுக்கு அதிக பயண நேரத் தேர்வுகளை வழங்குவதற்கும் KTMB எடுத்துள்ள முன்முயற்சி நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:03 pm
