நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தென் தாய்லாந்தில் தீவிரமடையும் கலவரம்: நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் 

மலாக்கா: 

தென் தாய்லாந்தின் மூன்று மாகாணங்களில் குண்டுவெடிப்பு, அரசு அலுவலகங்கள் மற்றும் டயர்கள் கொளுத்தப்பட்ட சம்பவங்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

இதனைத் தொடர்ந்து மலேசியா-தாய்லாந்து எல்லைப் பகுதிகளில் மலேசிய காவல் துறை தனது கண்காணிப்பையும் பாதுகாப்பையும் தீவிரப்படுத்தியுள்ளது என்று இன்று மலாக்கா ஆளுநரிடம் பட்டம் பெற்ற அரச மலேசிய காவல்படை தலைவர் டான்ஶ்ரீ முஹம்மத் காலித் இஸ்மாயில் கூறினார். 

நிலவும் சூழலில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

எல்லைப் பாதுகாப்பு குறித்துப் பேசிய அவர், பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் உடனடியாக முடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

குறிப்பாக மலேசியர்கள் பலர் அடிக்கடி தாய்லாந்துக்குக் பயணம் மேற்கொள்வதால், அவர்களின் பாதுகாப்பைக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முன்னதாக, மலாக்கா மாநில ஆளுநர் துன் முகமது அலி ருஸ்தாமின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டபோதே டான்ஶ்ரீ முஹம்மத் காலித் இஸ்மாயில் இவ்வாறு தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset