செய்திகள் மலேசியா
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாளில் சிவசுப்பிரமணியம் டத்தோ விருது பெற்றார்
மலாக்கா:
மஇகா தேசிய மட்டத்திலும் தமிழ் ஊடக வட்டத்திலும் நன்கு அறிமுகமான எல். சிவசுப்பிரமணியம் இன்று டத்தோ பட்டம் பெற்றுள்ளார்.
அரசியலில் நீண்ட காலம் பயணித்துவரும் டத்தோ சிவசுப்பிரமணியத்திற்கு மலாக்கா மாநில ஆளுநர் டத்தோ பட்டம் வழங்கி சிறப்பு செய்துள்ளார்.
மஇகா தலைமைக்கு தளராத விசுவாசியாக விளங்கி வரும் டத்தோ சிவசுப்பிரமணியத்தின் பொது வாழ்க்கைப் பயணம் நெடியது.
அவரின் தளராத உழைப்பிற்கும் அரசியல் எல்லையில் அவர் உண்மையாக ஆற்றிரும் கடமைக்கும் இந்த உயர்வு கிட்டி இருப்பதாகக் கருதலாம்.
மஇகா தேசிய ஊடகப் பிரிவு செயலாளராக கடமை ஆற்றி வரும் டத்தோ சிவசுப்பிரமணியம், மஇகா மத்திய செயலவை உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
மேலோர் அவை என்று சொல்லக்கூடிய நாடாளுமன்ற மேலவையின் தலைவராக டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் இருந்தபொழுது அவருக்கு தனிச் செயலாளராக இவர் கடமையாற்றி இருக்கிறார்.
அதைப்போல தெற்காசிய கட்டுமானத் தூதராக இருந்த பொழுதும் விக்னேஸ்வரனிடம் சிறப்பு செயலாளராக பணிபுரிந்தவர் டத்தோ சிவசுப்ரமணியம்.
வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசுசார் அமைப்புக்கள், அரசியல் இயக்கம் என்று தொடர்ந்து பொதுவாழ்வுப் பயணத்தை மேற்கொண்டு வரும் டத்தோ எல் சிவசுப்பிரமணியம் தனக்கு டத்தோ பட்டம் கிடைப்பதை ஓர் அரசியல் அங்கீகாரமாக ஏற்றுக் கொள்ளும் அதேவேளை இது தன்னுடைய அரசியல் பயணத்தை மேலும் ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார்
இத்தகைய சிறப்பை எட்டுவதற்கு துணை நின்ற மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் உள்ளிட்ட தேசிய தலைமைக்கும் இந்தவேளையில் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இன்று மலாக்கா ஆளுநர் மாளிகையில் டத்தோ பட்டத்தைப் பெற்ற பின் சிவசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
