நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கணினி, மடிக்கணினி மூலம் மட்டும் உச்சநீதிமன்ற ஆன்லைன் விசாரணை

புது டெல்லி:

வழக்குரைஞர்கள் ஸ்மார்ட்போன் மூலம் ஆன்லைன் முறையில் விசாரணையில் பங்கேற்பதால் இடையூறுகள் ஏற்படுவதாக இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அதிருப்தி தெரிவித்ததால், வழக்குரைஞர்கள் கணினி அல்லது மடிக்கணினியை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டார்.

உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் மூலமாக பல்வேறு வழக்குகளின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இணையத்தின் வேகம் குறைந்ததால் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன.
இதனால் 10 வழக்குகளின் விசாரணையை தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஒத்தி வைத்தார்.  

இதேபோல மற்றொரு வழக்கு விசாரணையின் போது, வழக்குரைஞர்கள் வைத்திருந்த மோசமான இணையதள இணைப்பால் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் கூறுகையில்,

"இதுபோன்று வழக்குகளை விசாரிக்க எங்களிடம் வலிமை இல்லை' என்றனர்.
இதையடுத்து, உச்சநீதிமன்றப் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில், "வழக்கு விசாரணையில் பங்கேற்கும் வழங்குரைஞர்கள், மனுதாரர்கள் ஆகியோர் கணினி, மடிக்கணியைப் பயன்படுத்த வேண்டும். அதற்கான இணைய சேவை ஸ்திரமானதாக இருக்க வேண்டும். இதில் எந்தவித தடையும் ஏற்படக் கூடாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக உச்சநீதிமன்றம், 2020, மார்ச் முதல் ஆன்லைன் மூலம் வழக்குகளை விசாரித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset