நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு

புது டெல்லி: 

மத்திய பிரதேசத்தில் தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சோஹன் சிங் பாலியல் வன்கொடுமை வழக்கில் 2005-ம் ஆண்டு ஆயுள் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார். தேவையான ஆதாரம் இல்லை எனக் கூறி ஆயுள் தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து 2017-ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகுதான் சோஹன் சிங் விடுதலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த  உச்ச நீதிமன்றம், தண்டனைக் காலம் முடிந்த பிறகும் சோஹன் சிங்கை விடுதலை செய்யாதது அடிப்படை உரிமையை மீறும் செயல் எனக் கூறி, ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset