நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கொச்சியிலிருந்து அபுதாபி சென்ற விமானத்தில் கோளாறு: 180 பயணிகள் அவதி

புது டெல்லி:

கொச்சியில் இருந்து அபுதாபி நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் கொச்சிக்கே திரும்பியது. இதனால் அந்த விமானத்தில் இருந்த த 180 பேர் கடும் அவதி அடைந்தனர்.

கொச்சியில் இருந்து இரவு 11.10 மணிக்கு அபுதாபிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

பயணத்தை தொடர்வதற்கு பதிலாக, மீண்டும் கொச்சிக்கு திரும்ப முடிவு செய்த விமானி கொச்சி விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் அதிகாலை 1.44 மணிக்கு கொச்சி விமான நிலையத்துக்கு மீண்டும்  திரும்பியது.
180 பயணிகளும் வேறு விமானத்தில் அபுதாபிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset