நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி

ஜெனீவா: 

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின்  கூட்டத்தில், சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு உறுதியான, பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கருத்துச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரத்துக்கான உரிமைகளை இந்தியா நிலைநிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து பேசிய இந்தியப் பிரதிநிதி ஷிதிஜ் தியாகி, மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவர் பதவியை வகிக்கும் சுவிட்சர்லாந்து, இந்தியாவின் உண்மை நிலைக்குப் பொருந்தாத, தவறான தகவல்களைப் பரப்பி கவுன்சிலின் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இதைவிட்டு, இனவெறி, பாகுபாடு, வெளிநாட்டினர் மீதான வெறுப்பு போன்ற அதன் சொந்த சவால்களில் சுவிட்சர்லாந்து கவனம் செலுத்த வேண்டும்.

இந்தக் கவலைகளைத் தீர்க்க ஸ்விட்சர்லாந்துக்கு உதவ இந்தியா தயாராக இருக்கிறது என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset