நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தை மோடி தவிர்ப்பு

புது டெல்லி:

அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. பொது சபைக் கூட்டத்தை இந்திய பிரதமர் மோடி
பங்கேற்காமல் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐநா சபையில் 80வது பொதுச்சபைக் கூட்டம் செப்.9ம் தேதி நியுயார்க்கில் தொடங்குகிறது. இந்தக்கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா செல்கிறார்.

இந்தக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்  செப்டம்பர் 23ம் தேதி பேச உள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றால் டிரம்ப்பை சந்திக்க நேரிடும் என்பதாலும், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக பிரச்சனை உள்ளதாலும் பிரதமர் மோடி இந்த கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset