செய்திகள் இந்தியா
ஆகஸ்ட் 15 ‘இந்திய தினம்’: அமெரிக்க மாகாணங்கள் பிரகடனம்
வாஷிங்டன்:
இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்திய தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள் சிறப்பு பிரகடனங்களைச் செய்து வருகின்றன.
இந்தியாவின் காலாசாரம், பாரம்பரியம், பன்முகத்தன்மை, அமெரிக்க சமூகத்தில் புலம்பெயா்ந்த இந்தியா்களின் பங்களிப்பு வளா்ந்து வருவதை முன்னிலைப்படுத்தும் வகையிலும் இந்தியாவின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் இந்தப் பிரகடனங்களைச் செய்து வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று, இந்தியாவின் சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், துணைத் தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதரகம் சாா்பில் பல்வேறு மாகாணங்கள், நகரங்களில் மூவா்ண தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சிகள், அணிவகுப்புகள், கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்திய - அமெரிக்கா்கள், புலம்பெயா்ந்த இந்திய சமூகத்தைச் சோ்ந்தவா்கள் பெருமளவில் கூடுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
