செய்திகள் இந்தியா
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
புதுடெல்லி:
ரக்க்ஷா பந்தன் பண்டிகைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதற்காக, பிருந்தாவனத்தில் உள்ள விதவைகள் குழுவினர் 1,100 ராகிகளைத் தயாரித்துள்ளனர்.
பிருந்தாவனத்தில் தயாரித்த ராக்கிகளில் பிரதமரின் வண்ணமயமான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
சமூகம் விதித்திருந்த நீண்டகாலக் கட்டுப்பாடுகளை மீறி, ஞாயிற்றுக்கிழமையன்று பிருந்தாவனத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோபிநாத் கோயிலில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்களில் விதவைகள் பங்கேற்றனர்.
பல ஆண்டுகளாக, பிருந்தாவனத்தில் உள்ள விதவைகள் கடுமையான நடத்தைகளை எதிர்கொண்டு, தனிமைப்படுத்தப்பட்டு, எளிமையான வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, பண்டிகைகளைக் கொண்டாடுவதில் அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 6,000 விதவைகள் பெரும்பாலும் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் - தெருக்களில் பிச்சை எடுப்பது, கோயில் படிக்கட்டுகளில் படுத்திருப்பது, உணவிற்காக யாசிப்பதையோ காண முடிந்தது. பல்வேறு கொடுமைகளுக்குப் பின்பு, ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகைக் கொண்டாட்டங்களில் பங்கேற்கக்கூட விதவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
2012-ல், பிருந்தாவனத்தில் வசிக்கும் விதவைகளின் மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களைப் பராமரிக்குமாறு உச்ச நீதிமன்றம் 'சுலப் இன்டர்நேஷனல்' அமைப்பைக் கேட்டுக்கொண்டது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, தன்னார்வத் தொண்டு நிறுவனம் வாரணாசி மற்றும் பிருந்தாவனத்தில் 1,500 விதவைகளைப் பராமரித்து வருகிறது.
ரக்ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
