
செய்திகள் கலைகள்
கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் மாரடைப்பால் காலமானார்.
புதுடெல்லி:
கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 83.
நேற்றிரவு, டெல்லியில் உள்ள தனது வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். வீட்டில் உள்ளோர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பண்டிட் பிர்ஜு மகாராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
சமீப காலமாக சிறுநீரகக் கோளாறு காரணமாக பிர்ஜு மகாராஜ் டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கதக் நடனக் கலைஞர்களின் மகாராஜ் குடும்பத்தைச் சேர்ந்த பிர்ஜு மகாராஜின் தந்தை அச்சன் மகாராஜ், மாமன்மார்கள் சாம்பு மகாராஜ், லச்சு மகாராஜ் ஆகியோரும் தலைசிறந்த கதக் நடனக் கலைஞர்களாவர். பிர்ஜு மகாராஜ் தனது திறமைக்காக நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதைப் பெற்றார்.
பண்டிட் ஜி, மகாராஜ் ஜி என்ற வாஞ்சையோடு அழைக்கப்படும் பண்டிட் மகாராஜ், சிறந்த ட்ரம்ஸ் இசைக் கலைஞரும் கூட.
தும்ரி, தாத்ரா, பஜன், கஸல் போன்ற வடிவிலான பாடல்களை மிகச் சிறந்த முறையில் நேர்த்தியாகப் பாடக்கூடியவர்.
வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை மிக சுவாரஸ்யமாக சொல்லக் கூடிய கதை சொல்லி.
உனைக் காணாத நானும்: கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் உனைக் காணாத நானும்.. என்ற பாடலில் கதக் நடனம் இடம்பெற்றிருக்கும். அந்தப் பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்தவர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் தான். மேலும், நடிகர் கமல்ஹாசன், அவரிடம் தான் கதக் நடனம் கற்றுக்கொண்டார். எப்போதுமே பண்டிட் பிர்ஜு மகாராஜை அவர் கொண்டாடுவார்.
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 8:14 pm
வடிவேலு சார் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார்: ஷில்பா ஷெட்டி புகழாரம்
July 10, 2025, 11:04 am
பாக்கிஸ்தான் நடிகை சடலம் அழுகிய நிலையில் மீட்பு
July 8, 2025, 5:31 pm
பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிரம் கணக்கு முடக்கம்
July 6, 2025, 12:51 pm
ரசிகர்களின் மனதைக் கிரங்கடித்த HEARTS OF HARRIS - THE FINAL ENCORE இசைநிகழ்ச்சி
July 3, 2025, 10:23 pm
முழங்காலிட்டு பத்திரிகையைப் பெற்று கொண்ட விஜய் சேதுபதி
July 2, 2025, 10:41 am