செய்திகள் கலைகள்
“மூன்றாவது மனுஷியின் மூன்றாம் தர ட்வீட்”: த்ரிஷா குறித்து பார்த்திபன்
சென்னை:
தான் மேடையில் பேசிய விவகாரத்துக்கு த்ரிஷா எதிர்வினையாற்றிய நிலையில், தற்போது நடிகர் பார்த்திபன் அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
நடிகர் பார்த்திபன் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “அந்த நிகழ்ச்சியில் த்ரிஷா குறித்து நான் பேசியது உண்மையிலேயே தவறிதான் நடந்தது. நான் மேடையில் விஜய் குறித்தோ அஜித் குறித்தோ பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வேறு ஒரு புகைப்படம் வந்தது.
அதை பார்த்ததும் உண்மையிலேயே நான் திகைத்துப் போய் விட்டேன். ஆனால் வேண்டுமென்றே அந்த போட்டோவை நான் போட சொல்லி பேச ஆசைப்பட்டேன் என்று சொல்வது 100% பொய். ஏனெனில் ஒரு மகளிர் தினம் அன்று நான் யாரைப் பற்றி பேசுவேன் என்றால் வேலு நாச்சியாரை பற்றி பேச ஆசைப்படுவேன் அல்லது அன்னை தெரசாவை பற்றி பேச ஆசைப்படுவேன். அதைவிடுத்து நான் இப்படி பேச ஆசைப்பட்டேன் என்று சொல்வது சரியில்லை.
அரசியல் என்பது சாதாரண விஷயம் அல்ல. நடிகர் விஜய் அரசியலில் பல விஷயங்களை கடந்து வந்து கொண்டிருக்கும்போது கரூர் பிரச்சினையை விட அதிக பாதிப்புக்கு காரணமான ஒரு நிகழ்ச்சி இது. அந்த நிகழ்ச்சியில் இந்த பெண்மணி கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்று என் அடி மனதில் இருந்தது. ஆனால் அதை சொல்வதற்காக நான் அந்த மேடைக்கு செல்லவில்லை.
இந்த விவகாரம் குறித்து நண்பர் சமுத்திரக்கனி கூட தன் ஆதங்கத்தை ஒரு வீடியோவில் வெளிப்படுத்தி இருந்தார். அவர் யாரிடமும் காசு வாங்கிக் கொண்டு அப்படி பேசவில்லை. அன்பு மிகுதியால் அவ்வாறு பேசினார். இந்த விவகாரம் குறித்து நான் மன்னிப்பு கேட்ட பிறகு த்ரிஷா ஒரு ட்வீட் போடுகிறார். அதில் நானே விரும்பி அந்த போட்டோவை போட சொன்னதாக குறிப்பிட்டு இருந்தார். இப்படி ஒரு ட்வீட் வரும் என்று தெரிந்திருந்தால் நான் வருத்தம் தெரிவித்திருக்கவே மாட்டேன்.
அது ஒரு மூன்றாவது மனுஷியின் ஒரு மூன்றாம் தரமான ட்வீட். சமீப காலமாக அவர் குறித்து வந்த கொச்சையான கருத்துக்கள் பொதுவெளியில் இருக்கிறது. அவை அனைத்துக்கும் அவர் பதில் சொல்லியிருந்தார் என்றால் நான் இதை வரவேற்று இருப்பேன். ஆனால் அது எதற்குமே பதில் சொல்லாமல் எனக்கு மட்டுமே கண்டனம் தெரிவித்த காரணத்தால் நான் வருத்தம் தெரிவித்ததே தவறு என நிறைய பேர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வி ஸ்டாண்ட் வித் பார்த்திபன் என்று நிறைய பேர் குரூப் ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த நண்பர்களுக்கு நன்றி” இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 11:52 am
ஓணம் ஓட்டத்தில் பிருத்விராஜின் கலிஃபாவை முந்திய நிவின் பாலியின் பெத்லகேம்
August 22, 2026, 4:18 pm
‘மோசமான’ திரைப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு
August 21, 2026, 5:34 pm
தமிழ்ச்சினிமாவின் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார்
August 19, 2026, 3:00 pm
நடிகர் விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் திரைப்படத்தின் மோசமான வசூல்: ரசிகர்கள் ஏமாற்றம்
August 19, 2026, 2:38 pm
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் முதல் சிங்கிள்: ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகிறது
August 18, 2026, 12:49 pm
நடிகை அனன்யா ராஜ் காலமானார்
August 17, 2026, 7:24 pm
ஜன நாயகன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வரும் ஆக. 21 ஆம் தேதி வெளியாகிறது
August 17, 2026, 12:20 pm
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 2 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் வேட்டை
August 13, 2026, 5:40 pm
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆகும்: சூர்யா நம்பிக்கை
August 13, 2026, 11:42 am
