செய்திகள் கலைகள்
கடுமையான உடல்நிலை பாதிப்பு: மலேசிய நடிகர் சத்தியா மருத்துவமனையில் அனுமதி
கோலாலம்பூர்:
மூத்த நடிகரும், நகைச்சுவை கலைஞருமான சத்தியா (62) இன்று அதிகாலை முதல் அம்பாங் மருத்துவமனையின் மஞ்சள் சிகிச்சைப் பிரிவில் மயக்க நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மகள் அமானி (37) கூறுகையில், அதிகாலை 1.30 மணியளவில் தெளிவாக பேச முடியாத நிலை ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தார். நேற்று இரவு முதல் தலைச்சுற்றல், கண்கள் மஞ்சளாகுதல், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாகவும் கூறினார்.
மருத்துவர்கள் மேற்கொண்ட ‘X-ray’, இரத்த பரிசோதனைகளின் பின்னர், அவரது காலில் மேலதிக அறுவைச் சிகிச்சை அவசியம் என தெரியவந்துள்ளது.
முன்னர் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட இடது காலை மீண்டும் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இம்முறை முழங்காலுக்கு மேல் பகுதியில் வெட்ட வேண்டியிருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கால் காயத்தில் பாக்டீரியா ஏற்பட்டுள்ளதால், உடலின் மற்ற பகுதிகளுக்கு அவை பரவாமல் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவரது வலது காலிலும் கடுமையான வீக்கம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக சிகிச்சை, மருந்துகளை முறையாக எடுத்துக்கொண்டிருந்தாலும், தற்போது அவர் இன்னும் மயக்க நிலையில் இருப்பதால் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 11:52 am
ஓணம் ஓட்டத்தில் பிருத்விராஜின் கலிஃபாவை முந்திய நிவின் பாலியின் பெத்லகேம்
August 22, 2026, 4:18 pm
‘மோசமான’ திரைப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு
August 21, 2026, 5:34 pm
தமிழ்ச்சினிமாவின் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார்
August 19, 2026, 3:00 pm
நடிகர் விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் திரைப்படத்தின் மோசமான வசூல்: ரசிகர்கள் ஏமாற்றம்
August 19, 2026, 2:38 pm
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் முதல் சிங்கிள்: ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகிறது
August 18, 2026, 12:49 pm
நடிகை அனன்யா ராஜ் காலமானார்
August 17, 2026, 7:24 pm
ஜன நாயகன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வரும் ஆக. 21 ஆம் தேதி வெளியாகிறது
August 17, 2026, 12:20 pm
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 2 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் வேட்டை
August 13, 2026, 5:40 pm
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆகும்: சூர்யா நம்பிக்கை
August 13, 2026, 11:42 am
