செய்திகள் கலைகள்
ராயாவிற்காக 30 ஜோடி உடைகளை தயார் செய்த இசையமைப்பாளர் ஹேல் ஹுசைனி
கோலாலம்பூர்:
பிரபல பாடகர், இசையமைப்பாளர் ஹேல் ஹுசைனி, இவ்வாண்டு ரமலான் பெருநாள் காலத்தில் தனது பணிப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக 30 ஜோடி உடைகள் தயாரித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டிய நிலை காரணமாக, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வேறுபட்ட உடை அணிவது அவசியமாக இருப்பதாக அவர் கூறினார். அதிக அளவில் அழைப்புகள் கிடைத்திருப்பதால் இந்தத் தயாரிப்புகள் தேவைப்பட்டதாகவும் விளக்கமளித்தார்.
இந்த ஆண்டு உடை அலங்காரங்களில் புதிய போக்குகளையும் அவர் பின்பற்றுகிறார். குறிப்பாக ‘மாச்சா ஸ்ட்ராபெர்ரி’ நிறத் தேர்வை இரண்டாம் நாள் ஷவ்வாலில் அணிய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், வழக்கம்போல் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதாகவும் கூறினார்.
இவ்வாண்டு நான்கு பெருநாள் பாடல்களை உருவாக்கியுள்ள அவர், புதிய பாடல்கள் அதிகமாக வெளியாவதை நேர்மறையாகக் காண்பதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு படைப்பும் உழைப்பின் பலன் என்பதால், கேட்பவர்கள் தங்களுக்குப் பிடித்தவற்றைத் தேர்வு செய்வதே முக்கியம் என்றும் அவர் கூறினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:21 am
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்
July 9, 2026, 2:38 pm
ரூ.70 கோடியைத் தாண்டிய ஆலியா பட்டின் ஆல்பா
July 7, 2026, 12:32 pm
பிரதீப் ரங்கநாதன் படத்தை இயக்கும் 6 இயக்குநர்கள்
July 2, 2026, 9:12 pm
இளையராஜாவின் காப்புரிமை வழக்கில் இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
June 30, 2026, 4:16 pm
பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாக இருந்த அனைவருக்கும் நன்றி: சாந்தனு பாக்கியராஜ்
June 27, 2026, 12:33 pm
நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்
June 24, 2026, 10:20 pm
பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் மம்முட்டி
June 24, 2026, 4:13 pm
ரஜினிகாந்த்தின் தர்மன் திரைப்படத்தில் நடிகை ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்
June 22, 2026, 12:39 pm
