நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புஞ்சாக் ஆலாமில் வெள்ளம் ஏற்படக்கூடிய மூன்று பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன

கோலா சிலாங்கூர்: 

பண்டார் புஞ்சாக் ஆலாமில் வெள்ளம் ஏற்படக்கூடிய மூன்று பகுதிகளை சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை தரப்பு கண்காணித்து வருகிறது. 

தாமான் தாசேக் அலாம் சூர்யா, தாமான் சகெரா புர்னாமா, மற்றும் ஜாலான் பெர்சியாரான் புஞ்சாக் ஆலாம் 6 ஆகியவை அந்த மூன்று பகுதிகளாகும் என்று சிலாங்கூர் JBPM நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் அஷ்ருல் ரிசால் கூறினார். 

கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு நிலையத்தின் ஆறு தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்படுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். 

முன்னதாக, அப்பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, பண்டார் புஞ்சாக் ஆலாம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொலிகள் வைரலாகின. 

தற்போதைய நிலைமையைக் கண்காணிப்பதற்கும், வெள்ள நிலைமை மோசமடைந்தால் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும், சிலாங்கூர் ஜேபிபிஎம் சம்பந்தப்பட்ட பகுதியைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset